Friday, June 4, 2010

கதம்பம் - 1

கதம்பம் - 1.

**************************************************
படிச்சவன் பாவம் பண்ணினா அய்யோன்னு அய்யோன்னு போவான் அப்படினு ஒரு பெருசு நா ஊருக்குப்போகும்போது சொல்லுச்சு. அப்படின்னா இந்த (பதிவு?)உலகத்துல கிட்டத்தட்ட எல்லாருமே போயிருக்கனுமே - எப்படி கருணாநிதி மாதிரி பொய்யுனு தெரிஞ்சே இப்படியெல்லாம் பேசறீங்கனு கேட்டேன் - தடியெடுத்தார், பிடித்தேன் ஓட்டம்.

**************************************************
எப்பவுமே வளவளனு பேசற எங்க நண்பன் ஒருத்தன்கிட்டப் போய் முதுகக் காண்பிச்சு "டேய் இங்க கொஞ்சம் பேசு" அப்படினு இன்னொரு நண்பன் சொன்னான், முதலில் எங்களுக்கு ஒன்னும் புரியல, சொரியச்சொல்றானு புரிஞ்ச போது அங்கே ஒரே நிலவரம் கலவரம் ஆனது.
**************************************************

எனக்கு ஒரே குழப்பம் -
அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சு நாம ஒவ்வொரு செயலையும் செய்யனுமா? அடுத்தவங்க என்ன நினைச்சாலும் சரினு நினைச்சு நாம ஒவ்வொரு செயலையும் செய்யனுமா?

அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சு நாம ஒவ்வொரு செயலையும் செஞ்சா
அதுல என்ன தப்பு இருக்குனு நமக்கு முதல்லயே தெரியும், திருத்திக்கலாம்.
அசடு வழிய வேண்டியதில்லை
அவங்க மூவ் தெரியும்கறதுனால ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம்.

அடுத்தவங்க என்ன நினைச்சாலும் சரினு நினைச்சு நாம ஒவ்வொரு செயலையும் செஞ்சா
அவங்க நினைக்காதை எல்லாம், நாம நினைப்பாங்கனு நினைச்சு பயப்பட வேண்டியதில்லை
தட்டுங்கள் திறக்கப்படும் - திறக்காட்டி ..ரே போச்சுனு அடுத்த வேலையைப் பார்க்கலாம்
எல்லாரும் தயங்கும் போது நாம மட்டும் எதைப்பத்தியும் யோசிக்காது செய்வதால் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம்.

என்ன பண்ண?
**************************************************
கடேசியா - எங்கியோ படிச்ச ஒரு ஜோக்.

ஆயிரம் பேர் உள்ள ராணுவ முகாம். பக்கத்து நகரத்துல ஒரு உலகத்துலயே காஸ்ட்லி விபசாரி. அவள் சம்பளம் 1 லட்சம். எப்படியாவது அவகிட்ட போயிறனும்னு ஆயிரம்பேருக்கும் ஆசை. 1 லட்சம் என்பது ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்கிறதால எல்லோரும் அடங்கி இருந்தாலும் ஆசை அடங்கவில்லை. அப்ப ஒரு மேஜர் ஒரு யோசனை சொன்னார் - தலைக்கு 100 ரூவா போடுவோம், ஆயிரம் பேருடைய பேரையும் சீட்டுக் குலுக்கிப்போட்டு யார் பேர் வருதோ அவன் போய்விட்டு வரட்டும் - ஆனா வந்து அங்க என்ன நடந்ததுனு சொல்லனும்னு கண்டிஷன். எல்லோரும் சம்மதிச்சு காரியம் நடந்தது. சீட்டில் வந்தது ஒரு சிப்பாய் பேர். எல்லோரும் மனசத்தேத்திக்கிட்டு அவனை அனுப்பிச்சாங்க.

அந்தச் சிப்பாய் விபசாரி வீட்டுக்குப் போய் காசைக் கொடுத்துட்டுப் பக்கத்தில் உட்காருகிறான். அப்போது அவள் "உன்னைப் பார்த்தால் அவ்வளவு வசதியானவனாத்தெரியலியே, எப்படி இங்கே" என்றாள். இவன் நடந்ததைக் கூறுகிறான்.
"என்னை நினைச்சு இத்தனை பேரு உருகுறாங்களா? - அப்படியானா இன்னிக்கு நீ இந்த உலகத்துலயே காஸ்ட்லி விபசாரிகிட்ட இலவசமாவே இருந்துட்டுப்போ" என்றவாறு அவனது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நூறு ரூபாய திருப்பிக்கொடுத்துவிடுகிறாள்.

2 comments:

  1. கதம்பத்தில் அனைத்தும் அருமை . அதிலும் அந்த விபசாரி ஜோக் என்னை சிந்திக்க வை

    கதம்பத்தில் அனைத்தும் அருமை . அதிலும் அந்த விபசாரி ஜோக் என்னை சிந்திக்க
    வைத்தது .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. //உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும்//

    ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - DONE

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete